வாடகைதாரர் வெளியேற்ற தடை குறித்து Saint-Denis நகர மேயர் Bally Bagayoko முடிவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!!
15 சித்திரை 2026 புதன் 07:45 | பார்வைகள் : 3652
Tribunal administratif de Montreuil நீதிமன்றம், Préfecture de la Seine-Saint-Denis தாக்கல் செய்த மனுவை விசாரித்து,Saint-Denis நகர மேயர் Bally Bagayoko வெளியிட்ட வாடகைதாரர் வெளியேற்றத் தடை உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது. அந்த உத்தரவு சட்டபூர்வமா என்ற கேள்வியில் “கடுமையான சந்தேகம் உள்ளது” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த நகராட்சி உத்தரவு, குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு முன் அவர்களுக்கு மாற்று வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இவ்வுத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அதன் சட்டபூர்வ தன்மை குறித்து இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி, Conseil d'État வழங்கிய முன்னாள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, குடியிருப்பு வெளியேற்றங்களை தடுக்க மேயருக்கு அதிகாரம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். இதன் மூலம், நீதித்துறையால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை நிர்வாக அதிகாரிகள் மாற்ற முடியாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவு சமூக அவசர நிலையை சமாளிக்க எடுத்த நடவடிக்கை என மேயர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அது சட்டத்திற்கு ஒவ்வாதது என நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. இதற்கு முன்பும் Bagneux மற்றும் Gennevilliers போன்ற நகராட்சிகளில் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire