கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது;அது கலைந்துவிடும்- கமல்ஹாசன்
16 சித்திரை 2026 வியாழன் 12:13 | பார்வைகள் : 1643
சேலத்தில் நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. பேசும்போது, அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் தி.மு.க. கூட்டணியில் ஒருவனாக இல்லாமல் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன். தொகுதி மறுவரையறையும், இட ஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்க வேண்டாம். நாளை நமக்கு நடக்க போகும் அநீதிக்கு எதிராக எழுச்சி குரலாக இருக்க வேண்டும்.
33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் முன்பே சொல்லிக்கொண்டு வருகிறோம். .ஆனால் தற்போது புதிய கண்டுபிடிப்பு போல ஒன்றிய அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. தற்போது 5 மாநில தேர்தல் நடக்கும் நேரத்தில் தொகுதி மறுவரை தேவையில்லாது. தேர்தல் முடியட்டும் பேசலாம் என்றால், உடனே பேசலாம் என்கிறீர்கள். தமிழகத்தின் உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் .
இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது; எந்த அசம்பாவிதமும் இல்லை; ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன் உதாரணம். வழிதவறி போகவேண்டாம்; கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது, அது கலைந்துவிடும். திராவிட குடும்பம் 75 வருடம் கட்டிக்காத்த குடும்பம்” என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire