ஜிமெயில் முகவரியில் திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய கூகிள்
16 சித்திரை 2026 வியாழன் 15:35 | பார்வைகள் : 1883
சமூகவலைதள உள்நுழைவு தொடங்கி வங்கி, ஆதார் போன்ற அரசு சார்ந்த தேவை என அனைத்து பயன்பாட்டிற்கு பொதுமக்கள் ஈமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில், உலகளவில் பெரும்பாலான மக்கள் கூகிளின் ஜிமெயிலையே பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக சமூகவலைத்தள கணக்குகளில் பயனர் பெயரை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்ணயிக்கப்பட்ட முறை பயனர்கள் விரும்பினால் பெயரில் திருத்தம் செய்ய முடியும்.
ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்கப்படும் போது என முகவரியில் உருவாக்கப்பட்டதோ அதை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. அதன் ஜிமெயில் முகவரியில் திருத்தம் செய்ய விரும்பினால், புதிய ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டி இருந்தது.
தற்போது புதிய கணக்கை உருவாக்காமலே ஜிமெயில் முகவரியை(gmail id) திருத்தம் அம்சத்தை கூகிள் வெளியிட்டுள்ளது.
கூகுள் கணக்கில் (Settings) ‘தனிப்பட்ட தகவல்’ (Personal Info) ‘Email’ என்ற பகுதியில் Change Google Account email என்பதை கிளிக் செய்து என்பதில் திருத்தம் செய்துகொள்ளலாம்.
முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள கூகிள் பயனர்களுக்கு இந்த வசதி கிடைத்துள்ளது. மற்ற நாடுகளுக்கும் விரைவில் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிமெயில் முகவரியில் மாற்றம் செய்தாலும், அதே கணக்கு சுயவிவரத்தை வைத்திருக்கும். மேலும் கூகிள் புகைப்படங்களில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், கூகிள் டிரைவில் உள்ள கோப்புகள், யூடியூப் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இந்த மாற்றத்திற்கு பின்னர் உங்கள் பழைய ஜிமெயில் முகவரி செயலிழந்து விடாது. மாறாக 2வது ஜிமெயில் முகவரியாக செயல்படும். உங்களது பழைய முகவரி வேறு யாருக்கும் வழங்கப்படாது.
பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். ஜிமெயில் கணக்கில் உள்நுழையும் போது, இரு முகவரிகளையும் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.
ஆனால், ஒரு முறை மாற்றம் செய்து விட்டால் குறைந்தது 12 மாதங்களுக்கு பிறகுதான், மீண்டும் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire