பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் ஹீரோவானார் !
16 சித்திரை 2026 வியாழன் 16:22 | பார்வைகள் : 1751
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ் தொடங்கி கவின், முகேன் ராவ், ராஜூ உட்பட பலரும் ஹீரோவாகிவிட்டார்கள். அந்த வரிசையில் பிக்பாஸ் போட்டியாளரான விக்கல்ஸ் விக்ரம் 'லைட் வெயிட் பேபி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். கே.சி.குரு இயக்கும் இந்த படத்தில் ஆர்த்தி கிருஷ்ணா ஹீரோயின்.
படத்தின் தலைப்பை வெளியிட்டு விக்கல்ஸ் விக்ரம் பேசியது: ''2016ம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். சிம்ரனின் 'நிலவை கொண்டு வா' பாடலை ரீல்ஸ் ஆக வெளியிட்டோம். அதை பார்த்து ரசித்து சிம்ரன், தேவா பாராட்டினார்கள். பின்னர், பிரபலம் ஆனோம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். பொது இடங்களின் அன்போடு உரிமையுடன் பேசினார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் குருவிடம் இருந்து ஒரு மெஸேஜ் வந்தது. நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் - பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் அது வழக்கமான படம் என தெரிந்தது. 2016ம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு என நினைத்தேன். வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்ட ஒரு கனவு இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் பீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன். ஆர்த்தி கிருஷ்ணா ஹீரோயின்'' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire