மாணவர்களுக்கு மாதம் ஒரு நாள் திரை விடுப்பு திட்டம்!!
16 சித்திரை 2026 வியாழன் 21:29 | பார்வைகள் : 3190
கல்வி அமைச்சர் Édouard Geffray, மாணவர்களின் திரை பயன்பாட்டை குறைக்க, மாதத்திற்கு ஒரு நாள் “டிஜிட்டல் விடுப்பு” கொண்டு வர திட்டமிட்டு வருகிறார். இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு செப்டம்பரில் இருந்து நடைமுறைக்கு வரலாம்.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பள்ளியில் தொடங்கப்படும் மாற்றம் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். மாணவர்கள் திரைகளை விட்டு விலகி, வாசிப்பு போன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், அது கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பொருந்துமா என்பதை தீர்மானிக்க ஆலோசனைகள் நடைபெறும். கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, இதை ஒரு பொதுவான நல்ல பழக்கமாக மாற்ற முயற்சி செய்யப்படுகிறது.
இதற்கிடையில், ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், 15 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதற்கான முயற்சியையும் முன்னெடுத்து வருகிறார். இதற்காக ஐரோப்பிய தலைவர்களுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire