மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கு ஓட்டு: எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் கோர்ட் அதிரடி
17 சித்திரை 2026 வெள்ளி 13:01 | பார்வைகள் : 1509
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பாக கூட, ஓட்டளிக்க தகுதியானவர்கள் என நிரூபிக்கும் பட்சத்தில், அவர்களை ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தீர்ப்பாயம் மேற்கு வங்கத்தில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு, வரும் 23 மற்றும் 29 தேதிகளில், இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, 91 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
அவர்களில், 34 லட்சம் பேர் தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளனர்.
தற்போது, முதல் கட்ட தேர்தலுக்கான தேதி நெருங்கிவிட்டதால், வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்து ள்ளது.
இதனால், மேல்முறையீட்டுக்கு சென்ற வாக்காளர்கள், இந்த தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, அவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மேல்முறையீட்டில் தகுதியானவர்கள் என நிரூபிக்கும்பட்சத்தில், இந்த தேர்தலிலேயே ஓட்டளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்றும், எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
சிறப்பு அதிகாரம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மால்யா பக்சி அடங்கிய அமர்வு, அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், 'மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடப்பதால், தேர்தல் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு வரை, மேல்முறையீட்டில் தகுதியானவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களின் பெயர் களை சேர்த்து, துணை வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
மேலும், அந்த பட்டியலில் இடம் பெற்றவர்களை தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
அதன்படி, வரும் 21ம் தேதிக்குள், தகுதியான வாக்காளர்கள் என, தீர்ப்பாயங்களால் உறுதி செய்யப்பட்டவர்கள், முதல் கட்ட தேர்தலிலும், 27 ம் தேதிக்குள் நிரூபித்தவர்கள் இரண்டாம் கட்ட தேர்தலிலும் ஓட்டளிக்க முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire