இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
18 சித்திரை 2026 சனி 14:22 | பார்வைகள் : 1640
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா மகளிர் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி டர்பனில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ம்ரிதி மந்தனா 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அதிரடி காட்டிய ஷஃபாலி வெர்மா 20 பந்துகளில் 34 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 36 ஓட்டங்களும் விளாசினர்.
நிலைத்து நின்று ஆடிய அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 47 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. காகா 3 விக்கெட்டுகளும், துமி செகுகுனே 2 விக்கெட்டுகளும், மாபா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அணித்தலைர் லௌரா வோல்வார்ட் 39 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.
அன்னெரி டெர்க்சன் ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire