நயன்தாரா தயாரிப்பாளர் ஆக ஜெயித்தாரா?
18 சித்திரை 2026 சனி 16:50 | பார்வைகள் : 1852
விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐகே படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்தான் முதலில் தொடங்கினார். ஆனால், பட்ஜெட் அதிகம், வேறு சில காரணங்களால் அந்த படத்தில் நயன்தாராவும் இணைந்து கொண்டார்.
இது குறித்து பேசியுள்ள விக்னேஷ்சிவன், முதலில் 200கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்த படத்தை தொடங்கினோம். அடுத்து 150 கோடி ஆனது. அப்பவும் பல பிரச்னைகள், ஓடிடி பிஸினஸ் ஆகவில்லை. 100கோடிக்கும் குறைவாக படத்தை எடுக்க வேண்டிய நிலை. அப்போது நயன்தாரா தயாரிப்பாளராக படத்துக்குள் வந்தார். மூக்குத்தி அம்மன் 2 படம் உட்பட பல படங்களுக்குதான் வாங்கிய சம்பளத்தை கொடுத்தார் ' என்றார்.
இப்போது எல்ஐகே படம் 50 கோடியை தாண்டியுள்ளது. தயாரிப்பாளராக நயன்தாரா ஜெயித்துவிட்டாரா என்றால், அது இன்னும் நடக்கவில்லை. இன்னும் படம் ஓடினால் மட்டுமே அவருக்கு போட்ட முதல் கிடைக்கும். தனது காதல் கணவருக்காக பல கோடி கொடுத்துள்ளார் நயன்தாரா. அடுத்தும் விக்னேஷ் இயக்கும் படத்தை, நயன்தாரா தயாரிப்பாரா? அல்லது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சினிமாவில் போடமாட்டேன் என்று சொல்வாரா?
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire