தமிழகப் பெண்கள் திமுகவை வீழ்த்த வேண்டும்; பீயூஷ் கோயல்
20 சித்திரை 2026 திங்கள் 12:32 | பார்வைகள் : 1827
தமிழகப் பெண்கள் திமுகவை வீழ்த்த வேண்டும் என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: அரசியலில் பெண் சக்திக்கு, அவர்களுக்கான இடத்தை கொடுக்க திமுக காங்கிரஸ் விடவில்லை; சுயநலம் பிடித்த அரசியல் காரணத்திற்காக மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. சமமான வாய்ப்பை மறுக்க செய்த திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழக பெண்கள் பதில் அளிப்பார்கள் . தமிழக பெண்கள் இதை மறக்க மாட்டார்கள்.
தமிழகப் பெண்கள் திமுகவை வீழ்த்த வேண்டும். பார்லிமென்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு தடுத்தது. பெண்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இத்தகைய கட்சிகளை எதிர்வரும் தேர்தலில் தமிழக பெண்கள் ஒன்றிணைந்து பாடம் புகட்ட வேண்டும்.
நமது தேசத்தின் பெண் சக்திக்கான அங்கீகாரம் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பொதுப் பிரிவு இடங்களான 543 அப்படியே பொது பிரிவாகவே தொடரும் வகையில், நாம் 50 சதவீத இடங்களை சேர்த்து அதனை பெண்களுக்காக ஒதுக்கீடு செய்கிறோம்.
அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க செய்கிறோம். இந்தியாவில் 55 கோடி வாக்காளர்கள், அதாவது 55 கோடி மக்கள் தொகை மட்டுமே இருந்தபோது இந்த 500 சொச்சம் இடங்கள் இறுதி செய்யப்பட்டன. இன்று அது 140 கோடியாக அதிகரித்து உள்ளது.
நமது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய, அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய, அவர்களின் பிரச்னைகளை தீர்க்கக் கூடிய, வாக்காளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய அதிக பிரதிநிதிகள் கிடைப்பதை சரியானதாகும். சனாதன தர்மத்தை மதிக்க முடியாத, தமிழகத்தின் வாழ்க்கை முறையையே தாக்கும் ஒரு நபரை முதல்வராக்க முடியாது. இவ்வாறு பீயூஷ் கோயல் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire