உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமானவரி துறைக்கு அவகாசம்
21 சித்திரை 2026 செவ்வாய் 06:24 | பார்வைகள் : 2047
துணை முதல்வர் உதயநிதி, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிட கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி, தன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களுக்கும், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தாக்கல் செய்த சொத்து விபரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன என, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான ஆர்.குமாரவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி, 'உதயநிதியின் வருமானவரி கணக்கு விபரங்கள் மட்டுமே எங்கள் வசம் உள்ளன. கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க, அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கூறி, முந்தைய உத்தரவின்படி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இதை ஏற்ற நீதிபதிகள், வருமானவரித்துறைக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire