பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
22 சித்திரை 2026 புதன் 13:45 | பார்வைகள் : 1876
எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களை நாம் நினைவுகூர்கிறோம். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள்.
இந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மீண்டு வர முயலும் குடும்பங்கள் பற்றிய சிந்தனைகள் எனது மனதில் இருக்கிறது. ஒரு தேசமாக, துயரத்திலும் உறுதியிலும் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire