உக்ரைன் தலைநகர் கீவ்வில் துப்பாக்கிச் சூடு
22 சித்திரை 2026 புதன் 13:46 | பார்வைகள் : 1848
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஹோலோசிவ்ஸ்கி (Holosiivskyi) மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (18) அன்று ஒரு நபர் தானியங்கி துப்பாக்கியுடன் சரமாரியாகச் சுட்டபடி வீதிக்குள் புகுந்ததில் வீதியில் சென்ற நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டார். சூப்பர் மார்க்கெட்டிற்குள்ளும் அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உக்ரைனின் சிறப்பு அதிரடிப்படை பொலிஸார், அந்த நபருடன் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய வேண்டாம், அவர்களை விடுவித்தால் நாம் பேசலாம்” என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அந்த நபர் பொலிஸாருக்குப் பதிலளிக்காமல் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டி வந்ததால், பணயக்கைதிகளின் உயிரைக் காப்பாற்ற அதிரடியாகத் தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டது. பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்தத் துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire