தமிழகத்தில் வெயில் இன்னும் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
23 சித்திரை 2026 வியாழன் 09:33 | பார்வைகள் : 1596
தமிழகத்தில் ஏப்.26 வரை வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
இன்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா வழியாக, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிற பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகத்தில் ஏப். 26 வரை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் (5.4 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய வெயில் (ஏப்.,22)(டிகிரி பாரன்ஹீட்)
வேலுார் 105.2
மதுரை ஏர்போர்ட் 104
ஈரோடு 103.6
கரூர் பரமத்தி 103.1
திருப்பத்துார் 102.9
தர்மபுரி 102.5
சேலம் 102.5
திருத்தணி 101.6
திருச்சி ஏர்போர்ட் 101.6
கோவை 100.9
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire