கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் தெரியாதவர் கார்கே: துணை ஜனாதிபதி
23 சித்திரை 2026 வியாழன் 10:36 | பார்வைகள் : 1570
காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு அச்சம் தரக்கூடியவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டியளித்த போது, மோடியை 'பயங்கரவாதி' என குறிப்பிட்டார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அதற்கு கார்கே விளக்கம் அளித்தார்.
அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடிக்கு, பெண்கள் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் என்பதே கிடையாது. அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, எதிர்க்கட்சிகளை பா.ஜ., மிரட்டி, அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி.இவ்வாறு கார்கே கூறினார்.
பேட்டியின்போது, பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என கார்கே கூறியதும், அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே, ''மோடியை தனிப்பட்ட முறையில் நான் கூறவில்லை. ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வதால், அப்படி குறிப்பிட்டேன்,'' என கார்கே விளக்கம் அளித்தார். இதற்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா சென்றுள்ளார். பிதார் பகுதியில் நடந்த விழா ஒன்றில் அவர் பங்கேற்றார். இவ்விழாவில் கார்கேயும் கலந்து கொண்டார்.
அப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சில நேரங்களில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு கருப்புக்கும் வெள்ளைக்கும் அல்லது பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு அச்சம் தரக்கூடியவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என நான் உணர்கிறேன் எனத் தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire