நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பாரிய தாக்குதல் - 20க்கு மேற்பட்டோர் பலி
23 சித்திரை 2026 வியாழன் 14:44 | பார்வைகள் : 1788
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் சிலர் இரண்டு கிராமங்களில் நடத்திய தாக்குதல்களில் 20க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போர்னே மாகாணத்தில் சம்பீசா வனப் பகுதியில் புபாகு மற்றும் மாயோ லாடே ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (21) தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முதலான ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
நைஜீரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய லகுரவா அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கொள்ளை, மிரட்டல், மோசடி, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்கள் அந்நாட்டில் பல இடங்களில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire