'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!
23 சித்திரை 2026 வியாழன் 16:16 | பார்வைகள் : 2069
போர் தொழில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா, அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் கர . வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இயக்குனர் விக்னேஷ் ராஜா ரசிகர்களுக்கும், படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் தயவுசெய்து படம் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே வந்து சீட்டுகளில் அமர்ந்துவிடுங்கள். படத்தின் கதை முதல் காட்சியிலேயே நேரடியாகத் தொடங்கிவிடும். எனவே, சிறிது தாமதமாக வந்தாலும் நீங்கள் கதையின் முக்கியத் தொடர்பை ஆரம்பத்திலேயே இழக்க நேரிடும்." திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்கள் தயவுசெய்து இடைவேளை காட்சிகளையோ அல்லது படத்தின் கதையையோ எந்தவொரு சமூக வலைதளங்களிலும் வெளியிட வேண்டாம். அது மற்ற ரசிகர்களின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும்."
அதேபோல, இடைவேளை முடிந்து இரண்டாம் பாதி தொடங்கும்போதும் உடனடியாக உங்கள் இருக்கைகளுக்குத் திரும்பிவிடுங்கள். இவ்வாறு இயக்குனர் விக்னேஷ் ராஜா அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire