தமிழக சட்டசபை தேர்தல்; மாலை 6 மணி நிலவரப்படி 84.90% ஓட்டுப்பதிவு
23 சித்திரை 2026 வியாழன் 17:25 | பார்வைகள் : 2183
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 23) அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 84.90% ஓட்டுப்பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர்.
மாநிலம் முழுவதும், 33,133 இடங்களில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 1.06 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில், 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள் இருந்தனர்.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகம் முழுவதும் மாலை 6 மணிநிலவரப்படி 84.90% ஓட்டுப்பதிவாகி உள்ளது.
நான்குமுனை போட்டி
தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., - வி.சி.க., உள்ளிட்ட, 22 கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட 12 கட்சிகளை இணைத்து, அ.தி.மு.க.,வும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது.\u003cbr
களத்தில் விஐபிக்கள்
முதல்வர் வேட்பாளர்களான, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலம் எடப்பாடி தொகுதியிலும், புதிய வரவான த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், காரைக்குடி தொகுதியிலும் களத்தில் உள்ளனர். விஐபி தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இரவு 8 மணி வரை ஓட்டு
சென்னையில் மாலை 6 மணிக்குள் வந்தால், இரவு 8 மணி வரை ஓட்டளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும், இன்று மாலை ஆறு மணிக்குள் ஓட்டுச்சாவடி மையத்திற்குள் வந்துள்ள அனைவரும் வரிசையில் காத்திருந்து இரவு எட்டு மணி ஒன்பது மணி ஆனாலும் அதனைக் கடந்தும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
டாப் 5 தொகுதிகள்
குமாரபாளையம் 90.98
சங்ககிரி 90.30
கிருஷ்ணராயபுரம் 89.83
பவானி 89.57
காங்கேயம் 89.46
குறைந்த ஓட்டுப்பதிவு மாவட்டங்கள்
நீலகிரி - 75.90
திருநெல்வேலி - 75.10
சிவகங்கை - 74.44
ராமநாதபுரம் - 74.41
கன்னியாகுமரி - 73.44
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire