அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் திகதிகள் என்ன?
26 வைகாசி 2026 செவ்வாய் 22:11 | பார்வைகள் : 4083
Emmanuel Macron அவர்களின் பதவிக்காலம் 14 மே 2027 அன்று முடிவடைகிறது. அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் Sébastien Lecornu ஏப்ரல் மாதத்தில் தேர்தல் திகதிகள் குறித்த இரண்டு முன்மொழிவுகளை மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளார். முதல் திட்டப்படி தேர்தலின் முதல் சுற்று 11 ஏப்ரல் 2027 மற்றும் இரண்டாம் சுற்று 25 ஏப்ரல் 2027 அன்று நடைபெறும்.
இரண்டாவது திட்டப்படி முதல் சுற்று 18 ஏப்ரல் 2027 மற்றும் இரண்டாம் சுற்று 2 மே 2027 அன்று நடைபெறும். இந்த விருப்பம் மக்ரோனின் பதவிக்கால முடிவிற்கு மிகவும் அருகில் இருப்பதால், அவர் “கடைசி நிமிடம் வரை” ஜனாதிபதியாக இருக்க முடியும்.
தற்போது இந்த தாமதம் தேர்தல் பிரச்சார அணிகளுக்கு பெரிய பிரச்சினையாக இல்லை. இருப்பினும், இலையுதிர் காலத்திற்குள் அதிகாரப்பூர்வ திகதிகள் அறிவிக்கப்படாவிட்டால் அது முக்கிய பிரச்சினையாக மாறும் என்று வலதுசாரி கட்சியின் ஒரு நிர்வாகி எச்சரித்துள்ளார். எனினும், மே மாத இறுதிக்குள் இதுபற்றி முடிவு எடுக்கப்படாமல் இருப்பது விசித்திரமானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire