பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள்; இதோ முழு விவரம்
28 வைகாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 1250
மேகதாது திட்டத்தை தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல்கள் இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று ஜல்சக்தி அமைச்சகம், மத்திய நீர்வள ஆணையத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டு உள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் இன்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தின் நலன்கள் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை, பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். அந்த கோரிக்கைகள் வருமாறு;மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையை தொடர்ந்து சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசிய பாடல் முதலாவதாக பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலை பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையை வழங்க வேண்டும்.
மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி மையம் ஆகியவற்றை தமிழகத்தில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வான்வழி அமைப்பு மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத்திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்த உள்ளதாக கர்நாடகா துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் இடையே பெருங்கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல்கள் இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று ஜல்சக்தி அமைச்சகம், மத்திய நீர்வள ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், மிக கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்துள்ளது. 2026ம் ஆண்டில் மட்டும 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire