தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
28 வைகாசி 2026 வியாழன் 07:16 | பார்வைகள் : 1348
தமிழக ரயில்வே, நெடுஞ்சாலை திட்டங்கள், ஓசூர், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் குறித்த மனுவை அளித்தார்.
இதன் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும். ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர்விஜய் கேட்டுக் கொண்டார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire