Paristamil Navigation Paristamil advert login

நாளை முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் சித்தராமையா

நாளை முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் சித்தராமையா

28 வைகாசி 2026 வியாழன் 09:24 | பார்வைகள் : 1258


கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வந்தது. இருவரும் அடிக்கடி டில்லி சென்று வந்தனர்.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலிடம் நேற்று முன்தினம் இருவரையும் டில்லி அழைத்தது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுவதுடன், அவரது மகனுக்கு மாநிலத்தில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, சித்தராமையா ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்திக்க சித்தராமையா நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சித்தராமையா, தனது ராஜினாமா கடிதம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.