ராகுலுக்கு அரசியல் மறதி நோய்; பியூஷ் கோயல் விமர்சனம்
29 வைகாசி 2026 வெள்ளி 10:10 | பார்வைகள் : 1227
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அரசியல் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு புகார் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ராகுல் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள பதிவில்; ராகுலுக்கு நீண்டகால அரசியல் மறதி நோய் (Amnesia) ஏற்பட்டுள்ளது. உண்மையை விட பொய்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.! அவர் சர்ச்சைக்குரிய நிறுவனம் என்று கூறி வரும் அதே கேஎம்ப்ட் நிறுவனத்திற்கு தான், காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் அரசுகள் மீண்டும் மீண்டும் திட்டங்களை வழங்கியுள்ளன.
ராகுல் மறந்துவிட்ட உண்மைகள்,
• பெங்களூரு சிட்டி பல்கலை, கர்நாடகா - நவம்பர் 25ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
• கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலை, தெலுங்கானா - செப்டம்பர் 24-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
• ஆதிகவி ஸ்ரீ மகரிஷி வால்மீகி பல்கலை, ராய்ச்சூர் - மார்ச் 24ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
• கர்நாடகா பல்கலை, தார்வாட் - ஜூன் 8, 2023ல் பணி ஆணை வழங்கப்பட்டது.
• தெலுங்கானா மாநில சுகாதார பல்கலை இந்த நிறுவனத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளது.
இந்த நிறுவனம் குற்றமுடையது எனில் தெலுங்கானா மற்றும் கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கள் அந்த நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர் என்று ராகுலால் சொல்ல முடியுமா? அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லுவாரா? காங்கிரஸ் அரசுகள் கண்களை மூடிக்கொண்டு இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதா? அல்லது மோடி அரசுக்கு எதிராக எழுதப்பட்ட நாடகமா?, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire