ரொமேனியாவில் விழுந்த ரஷ்ய ட்ரோன்
29 வைகாசி 2026 வெள்ளி 14:18 | பார்வைகள் : 1789
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின்போது, ஒரு ட்ரோன், நேட்டோ உறுப்பு நாடான ரொமேனியாவில் விழுந்து வெடித்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைன் எல்லையிலுள்ள ரொமேனியா நாட்டிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது ஒரு ட்ரோன் விழுந்து வெடித்துள்ளது.
அந்தக் கட்டிடம் தீப்பற்றிய நிலையில், ஒரு தாயும் மகளும் காயமடைந்துள்ளார்கள். அந்தக் கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த தாக்குதலை நேட்டோ அமைப்பும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக கண்டித்துள்ளன.
விடயம் என்னவென்றால், இதுவரை 47 முறை ரஷ்ய ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் ரொமேனியாவுக்குள் வந்து விழுந்துள்ளனவாம்.
ஒரு ட்ரோன், ரொமேனியாவிலுள்ள மக்கள் குடியிருப்பில் விழுந்து வெடித்தது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையில், தாக்குதல் குறித்து நேட்டோ செக்ரட்டரி ஜெனரலிடமும், கூட்டாளர் நாடுகளுக்கும் தகவலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரொமேனிய வெளியுறவு அமைச்சர், ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளை தங்களுக்கு விரைந்து அளிக்குமாறு நேட்டோ அமைப்பிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire