பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிகராக அஸ்வத் மாரிமுத்து!
29 வைகாசி 2026 வெள்ளி 16:00 | பார்வைகள் : 1350
குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி வைத்து இயக்கிய கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வெளியான லவ் டுடே படமும் நல்ல வசூலை பெற்றது.
இதனால், முன்னனி நடிகர்களில் ஒருவராக மாறினார். அடுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வசூலை பெற்றது. அடுத்து வெளியான Dude படமும் வசூலை அள்ளியது.
இப்படி தொடர்ந்து ஹீரோவாக மூன்று வெற்றி படங்களை கொடுத்ததால் பிரதீப் ரங்கநாதனின் மார்கெட் எங்கேயோ சென்றுவிட்டது. இந்நிலையில், இதுவரை இயக்குனராக இருந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படத்தில் மமிதா பைஜு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஏனெனில், இது பெண்ணை மையாமாக கொண்டு உருவாகும் திரைப்படம். அதோடு இந்த படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் நடிக்கவுள்ளாராம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire