24 பட கூட்டணி மீண்டும் இணைகிறதா?
29 வைகாசி 2026 வெள்ளி 16:08 | பார்வைகள் : 1526
கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகின்றனர். தமிழிலும் விஜயின் 'ஜனநாயகன்' படத்தின் மூலமாக அறிமுகமாகிறது கே.வி.என் நிறுவனம்.
ஜனநாயகன் படத்தை தொடர்ந்து சுமார் நான்கு தமிழ் படங்களை தயாரிக்க கே.வி.என் நிறுவனம் முடிவு செய்துள்ளனர். இதில் ஒரு படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தயாரிக்கவுள்ளனர். இது சூர்யாவின் 50வது படமாக அமைய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
தற்போது இந்த சூர்யா படத்தை 24 படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்க வாய்ப்பு உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. சூர்யா, விக்ரம் குமார் கூட்டணியில் 10 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த 24 படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire