பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக நீதி: அமைச்சர் நிர்மல்குமார்
30 வைகாசி 2026 சனி 10:29 | பார்வைகள் : 1180
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக நீதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:
ஏற்கனவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்த போவதாக கர்நாடகா அரசு தெரிவித்து இருக்கிறது.
எந்த காலத்திலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. அரசியல் காரணங்களுக்காகவே டி.கே.சிவக்குமார் பேசி உள்ளார். மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு மாநில மக்களுக்கும் இடையே அமைதி தேவை. தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புவதற்கு இவ்வாறு சிவக்குமார் செய்கிறார். அவர் பொறுப்பற்ற முறையில் பேச கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக நீதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலியல் குற்றங்களுக்கு ஆளான பெண்கள் கடந்த ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்டனர். கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire