வெளிநாட்டு மொழிகள்... பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை! தர்மேந்திர பிரதான்
31 வைகாசி 2026 ஞாயிறு 06:11 | பார்வைகள் : 1311
வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்குமாறு பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; புதிய கல்விக் கொள்கையின் கீழ் பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்படவில்லை. வெளிநாட்டு மொழிகளைக் கற்க 3வது மொழியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும். இதனை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
தாய்மொழிகளுக்கு ஆசிரியப் பற்றாக்குறை ஏதுமில்லை. பெரும்பான்மையான சிபிஎஸ்இ பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்கனவே தாய்மொழிகள் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் பல ஆண்டுகளாக 6 முதல் 8ம் வகுப்பு வரை மூன்று மொழிகளைப் படித்து வருகின்றனர்.
புதிய கல்வி கொள்கையைச் செயல்படுத்துவதில் எந்தக் குழப்பமும் இல்லை.சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் சுமார் 99 சதவீத மாணவர்களும், பெரும்பாலான மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் ஏற்கனவே மும்மொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர். இந்த நடைமுறையை 8ம் வகுப்புக்குப் பிறகும் தொடர வேண்டும் என்று தான் புதிய கல்விக் கொள்கையின் அம்சமாக இருக்கிறது. சிபிஎஸ்இ அமைப்பில் ஒரு சிலர் மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire