மூடப்பட்ட மதுக்கடை எத்தனை?: வெள்ளை அறிக்கை கேட்கும் பா.ஜ.
31 வைகாசி 2026 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 1336
ஆட்சிக்கு வந்ததும், 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதாக பெருமை பீற்றிக்கொண்ட தமிழக வெற்றிக் கழக அரசு, எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
அவரது அறிக்கை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு உத்தரவால் மூடப்பட்ட மூன்று டாஸ்மாக் கடைகளில் ஒன்று, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடையின் மதுக்கூட உரிமையாளர் த.வெ.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், இச்சலுகை கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவங்களே பாம் வைப்பாங்களாம்; இவங்களே எடுப்பாங்களாம்' என்பதை போன்ற இந்த தில்லுமுல்லு நாடகங்கள், முதல்வர் விஜய்க்கு தெரியாமலா நடக்கும்?
த.வெ.க., நிர்வாகிகளுக்கு கொலை செய்யவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடவும், மாமூல் வாங்கவும், சட்டவிரோதமாக டாஸ்மாக் நடத்தவும் சுதந்திரம் கொடுப்பதே அனைவருக்குமான ஆட்சியா?
ஆட்சிக்கு வந்த உடன், 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டதாக பெருமை பீற்றிக்கொண்ட த.வெ.க., அரசு, அவற்றில் எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
முந்தைய அரசை போல, வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்துவதை விட, ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire