Paristamil Navigation Paristamil advert login

பெனால்டிசூட் அவுட்டில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய PSG

பெனால்டிசூட் அவுட்டில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய PSG

31 வைகாசி 2026 ஞாயிறு 18:15 | பார்வைகள் : 1741


UEFA சாம்பியன்ஸ்லீக் இறுதிப்போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி ஆர்சனலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ஆர்சனல் அணிகள் மோதிய, UEFA சாம்பியன்ஸ்லீக் இறுதிப்போட்டி Puskas Arena மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே ஆர்சனல் காய் ஹாவெர்ட்ஸ் (Kai Havertz) கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (PSG) அணி கோல் அடிக்க போராடியது.

ஒருவழியாக 64வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஓஸ்மான் டெம்பெலே கோலாக மாற்றினார்.

பின்னர் ஆட்டநேர முடிவு வரை இரு அணிகளும் இரண்டாவது கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டிஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.

அதில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.