வெடிபொருள் பறிமுதல் வழக்கு; தமிழகம், கேரளா, கர்நாடகாவில் என்ஐஏ அதிரடி சோதனை
1 ஆனி 2026 திங்கள் 11:34 | பார்வைகள் : 1296
வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 19 இடங்களில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இன்று (மே 31) என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மலப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து 448 பெட்டிகளில் 89,600 ஜெலட்டின் குச்சிகளும், 35 பெட்டிகளில் 10,500 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெடிபொருட்கள் சட்டவிரோத குற்றச்செயல்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறி இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் கையிலெடுத்த என்.ஐ.ஏ. 6 பேரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
வழக்கில் தொடர்புடையவர்கள் வீடுகள் மற்றும் வெடிபொருள் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களின் இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 19 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire