கல்வி மாபியா மீது கடும் நடவடிக்கை; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 ஆனி 2026 திங்கள் 13:02 | பார்வைகள் : 1219
நீட் தேர்வில் நேர்மையைக் குலைத்த கல்வி மாபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது; வினாத்தாள் கசிந்ததும் உண்மைதான் என தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக , அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான அனைத்து வழக்குகளும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்.
நீட் தேர்வில் நேர்மையைக் குலைத்த கல்வி மாபியா மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேசிய தேர்வுகள் முகமை தோல்வியடைந்துவிட்டது, இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அரசு கல்வி மாபியாக்களை ஒழிக்கும். வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட எவரும் தப்பிக்க முடியாது. சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் தொழில்நுட்பச் சிக்கல்கள் உட்பட பல பிரச்னைகள் இருக்கிறது.அவை தற்போது ஐஐடி நிபுணர்களின் உதவியுடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு சிபிஎஸ்இக்கு நிபுணர்கள் குழு உதவி வருகிறது.11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே தங்களது விடைத்தாள்களின் நகல்களைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அடிக்கடி நாட்டை அவமதிக்கிறார். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire