இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் சந்திப்பு
2 ஆனி 2026 செவ்வாய் 13:59 | பார்வைகள் : 1201
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லியில் சந்திக்க உள்ளனர். அடுத்த வாரம் 8ம் தேதி (திங்கட்கிழமை) தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பின்போது பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெக தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, அடுத்த வாரம் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் தவெக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்-ஐ அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire