உக்ரேன் முழுவதும் ரஷ்யா நடத்திய உக்கிர தாக்குதல் - அச்சத்தில் மக்கள்
2 ஆனி 2026 செவ்வாய் 07:09 | பார்வைகள் : 1364
உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதீச செய்திகாள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா தாக்குதலில் டினிப்ரோவில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். 02.06.2026 அதிகாலை நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அங்கு குறைந்தது 29 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலை அடுத்து நகரின் மையப்பகுதியிலிருந்து பெரும் புகை மண்டலங்கள் எழுந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் தஞ்சம் புகுந்தனர். உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
உக்ரேனின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதி மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, உக்ரேன் மீது திட்டமிட்ட தாக்குதல்களை தொடுக்கப் போவதாக மாஸ்கோ கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire