ராஜ்யசபா சீட்! முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்துவோம்! கிரிஷ் சோடங்கர்
3 ஆனி 2026 புதன் 13:18 | பார்வைகள் : 1408
ராஜ்ய சபா சீட் தொடர்பாக முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது:ராஜ்ய சபா சீட் தொடர்பாக முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்தப்படும். இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். முதல்வர் விஜய் தமிழகத்தின் ஒரு உயர்ந்த தலைவர் ஆவார். முதல்வர் விஜயும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரமும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தச் சந்திப்பு நிச்சயமாகத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததாக அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, டில்லியில் தலைமை முடிவாகும். திமுக இண்டி கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ளது; எனினும், அதில் ஏதேனும் புதிய மாற்றங்கள் இருக்கிறதாஎன்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire