வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் வெளியீடு; அமைச்சர் ஆதவ் உறுதி
5 ஆனி 2026 வெள்ளி 08:28 | பார்வைகள் : 1558
வெளிப்படைத் தன்மையுடன் டெண்டர் வெளியிடப்படும்; ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் பேசினார்.
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுடன், சென்னை சேப்பாக்கத்திலும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடன் கிண்டியிலும், துறையின் அமைச்சர் ஆதவ் ஆலோசனை நடத்தினார்.
ஒப்பந்ததாரர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். ஜி.எஸ்.டி., வரி பிடித்தம் தொடர்பாக அமைச்சரிடம், ஒப்பந்ததாரர்கள் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் பேசியதாவது:
ஒப்பந்ததாரர் தேர்வு வெளிப்படையாக இனி நடக்கும். இதில், தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்கள் 10 சதவீதம் கமிஷன் தர வேண்டிய அவசியம் இனி இருக்காது.
இந்த 10 சதவீத சேமிப்பை, கட்டடங்கள் பராமரிப்பு பணிக்கு, ஒப்பந்ததாரர்கள் செலவிட வேண்டும். அதற்கேற்ப கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அடிப்படையில், டெண்டர்கள் வழங்கப்படும்.
ஒப்பந்ததாரர்கள் புகார்கள் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
அதை ஏற்று, தமிழகத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் வரை, சாலைப் பணிகளுக்கு செலவிட உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.இவ்வாறு ஆதவ் பேசினார்.
இதில், பொதுப்பணித்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், முதன்மை இயக்குனர் செல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில், 'ரேடியோ டிவிஷன்' ஒப்பந்ததாரர்கள் அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டும், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என, அவர்கள் தெரிவித்தனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire