7.7 சதவீத பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு அறிவிப்பு
6 ஆனி 2026 சனி 08:28 | பார்வைகள் : 1061
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட அதிகம் எனக் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவினாலும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் துடிப்புடன் இருந்தது. இதனால், பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது.
2025 ம் நிதியாண்டில் ரூ.299.89 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026 நிதியாண்டில் ரூ.323.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2026ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்திய பொருளாதாரரம் வலுவான வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.87.77 லட்சம் கோடி ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire