ஜூன் 18ல் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டம்
6 ஆனி 2026 சனி 10:35 | பார்வைகள் : 1044
தமிழகத்தில் ஜூன் 18ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் அர்லேகர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டசபை கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அப்போது கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அதிமுகவினரின் மனுக்கள் ஆய்வில் உள்ளது. அதிமுக கடிதங்கள் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை நேரலையாக பார்த்த மக்கள், தொடர்ந்து அவை நடவடிக்கைகளையும் நேரலையில் காண விரும்புகின்றனர். இதுவரை அரசியலில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்து, தற்போது தங்களது விருப்பப்படி புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்திய அமைச்சர்களும், முதல்வரும் அவைக்குள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சட்டசபை நேரலைக்கான பணிகள் சரியான நேரத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜேசிடி பிரபாகர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire