துணையின் தூக்கத்தை பாதிக்கக்கூடிய இரவு நேர பழக்கங்கள்!
6 ஆனி 2026 சனி 11:37 | பார்வைகள் : 1512
உலக தூக்க தினத்தில் திருமண வாழ்க்கையில் தூக்கம் மிகவும் முக்கியம் என்பதை ஆய்வுகள் எடுத்துரைக்கிறது.
ஒருவருக்கு தூக்க பிரச்சனை இருந்தால், மற்றொரு நபரின் உடல்நலம் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு உறவில் திருப்தியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்க துணையுடன் ஒரே படுக்கையில் தூங்குவது நெருக்கத்தை அதிகரிப்பதாக பலரும் நம்புகின்றனர். ஆனால், குறட்டை விடுவது, இரவில் மொபைல் பயன்படுத்துவது போன்ற சில சிறிய பழக்கங்கள், உங்க துணையுடன் தூக்கத்தை கெடுப்பதோடு உறவை பாதிக்க வாய்ப்புள்ளது
ResearchGate-ல் வெளியான ஆய்வில், ஒரு துணைக்கு தூக்கப் பிரச்சனை இருந்தால் அது மற்றொருவரின் உடல்நலம், மனநிலை மற்றும் உறவு திருப்தியை பாதிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது
உலகம் முழுவதும் இன்று (மார்ச் 14) World Sleep Day அனுசரிக்கப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் இந்நாளில், உங்கள் துணையின் தூக்கத்தை பாதிக்கக்கூடிய சில பொதுவான இரவு பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
படுக்கையில் மொபைல் பயன்படுத்துவது
தூங்கும் முன்பு மொபைல் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆய்வின்படி, மொபைலில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி, மெலோடோனின் ஹார்மோன் சுரப்பை பாதித்து தூக்க சுழற்சியை பாதிக்கக்கூடும்.திரை வெளிச்சம் காரணமாக அறை இருட்டாக இருப்பது, நோட்டிபிகேஷன் அல்லது வீடியோ சத்தம் போன்றவை துணையின் தூக்கத்தை பாதிக்க செய்யலாம்
அதிக சத்தத்தில் குறட்டை விடுவது
இது பல தம்பதிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். ஒருவர் அதிகமாக குறட்டைவிட்டால், மற்றொருவருக்கு தூக்கமின்மை ஏற்பட செய்யலாம்.சிலர் படுத்தவுடனே குறட்டைவிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த சத்தத்தால் துணையால் விரைவாக தூங்க முடியாது. அதேபோல், திடீரென வரும் அதிக குறட்டை சத்தத்தால் தூக்கத்தில் இருந்து விழிக்கவும் வாய்ப்புள்ளது
வெவ்வேறு நேரத்தில் தூங்குவது
சிலர் விரைவாக தூங்க ஆசைப்படுவார்கள். சிலர் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க விரும்புவார்கள். இது தம்பதிகள் சந்திக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனையாகும்.நீண்ட நேரம் லைட் அணைக்காமல் இருப்பது, டிவி சத்தம், மொபைலில் பிறருடன் பேசுவது அல்லது காலையில் அலாரம் சத்தம் போன்றவை துணைக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
இரவில் அடிக்கடி எழுவது
சிலருக்கு இரவில் எழுந்து பாத்ரூம் செல்வது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கக்கூடும். அச்சமயத்தில் லைட் ஆன் செய்வது, படுக்கையில் எழும் போது ஏற்படும் ஷேக்கிங், கதவு திறக்கும் போது வரும் சத்தம் போன்றவை மற்றொருவரின் தூக்கத்தை பாதிக்கலாம்
தம்பதிகள் தூக்க தரத்தை மேம்படுத்த டிப்ஸ்
தூங்குவது 30 நிமிடங்கள் முன்பு மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்
படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருக்கவும்
பெரிய மெத்தை மற்றும் தனித்தனி போர்வை பயன்படுத்தவும்
குறட்டை பிரச்சனைக்கு மருத்துவ உதவி கோரலாம்
முடிந்தவரை ஒரே மாதிரியான தூக்க சுழற்சி கடைப்பிடிக்கவும்.
இரவில் சரியாக தூங்காமல் இருப்பது மறுநாள் எரிச்சல், கோபம் மற்றும் உறவில் தேவையற்ற சண்டைகளை எழுப்பலாம். நல்ல தூக்கம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உறவு ஆரோக்கியத்திற்கும் முக்கியம் என ஆய்வுகள் கூறுகிறது.இதன் காரணமாக சில தம்பதிகள், Sleep Divorce Trend பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அதாவது, நன்றாக தூங்குவதற்காக தனித்தனி படுக்கை அல்லது தனித்தனி அறையில் தூங்க செய்வார்கள்
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire