அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் உட்பட 10 பேர் தவெகவில் ஐக்கியம்
7 ஆனி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 999
சென்னை பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் உட்பட 10 பேர் தவெகவில் இணைந்தனர்.
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், மரிய வில்சன் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், என்ஆர் சிவபதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இன்று தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் பட்டியல்;
* கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்
* உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்
* எம்சி சம்பத், முன்னாள் அமைச்சர்
* என்ஆர் சிவபதி, முன்னாள் அமைச்சர்
* சங்ககிரி - சுந்தரராஜ், முன்னாள் எம்எல்ஏ
* வீரபாண்டி - ராஜமுத்து, முன்னாள் எம்எல்ஏ
* ஸ்ரீவில்லிபுத்தூர் - மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ
* சாத்தூர் - ராஜவர்மன், முன்னாள் எம்எல்ஏ
* கலசப்பாக்கம் - பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ
* பாப்பிரெட்டிபட்டி - கோவிந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire