மேற்காசிய போர் நெருக்கடி; பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
7 ஆனி 2026 ஞாயிறு 08:37 | பார்வைகள் : 1422
மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக பொருளாதார ஆலோசனைக் குழுவினருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இருதரப்பினரும் மீண்டும் தாக்குலை நடத்தி வருகின்றனர். இதனால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், இன்று பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.மேற்காசியப் போர் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்திலும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல், சர்வதேச சந்தைகளில் நிலவும் மாற்றங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். இந்தியாவின் பொருளாதார மாற்றம், வளர்ச்சிக்கு முன்னுரிமைகள் அளிப்பது தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தேன். மேலும், சீர்திருத்தப் பயணத்திற்கு கூடுதல் உத்வேகம் அளிப்பது, வாழ்க்கை எளிமைப்படுத்துதல் மற்றும் தொழில் வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டோம்' என குறிப்பிட்டுள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire