இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்; உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம்
7 ஆனி 2026 ஞாயிறு 09:40 | பார்வைகள் : 1220
தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
பாஜவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி, புதிய கட்சி தொடங்கும் ஆயத்த பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டு உள்ளார். அதற்காக அவர் தொடங்கி உள்ள இது நம்ம இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். குறுகிய காலத்திலே கிட்டத்தட்ட 13 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரது இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மாநில தலைவராக அண்ணாமலை இருந்த தருணத்தில் அவருக்கு மத்திய அரசின் துப்பாக்கி ஏந்திய இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் பாஜவில் இருந்து விலகிவிட்டதால் தனக்கான இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை என முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கி கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் தமக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார். அவரது கடிதத்தை ஏற்று விரைவில் மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire