அஸ்வத் மாரிமுத்து சிம்பு இணையும் படம் எப்போது?
7 ஆனி 2026 ஞாயிறு 16:01 | பார்வைகள் : 1344
கோலிவுட்டில் இளம் நடிகராக வலம் வருபவர் சிம்பு. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை துவங்குவதற்கு முன்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும் அது அவரின் 51வது படம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிம்புவோ வெற்றிமாறன் படத்தில் நடிக்கப் போய்விட்டார். ஒருபக்கம் ரஜினியின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதியாகியுள்ளது.
எனவே, அஸ்வத் மாரிமுத்து சிம்பு இணையும் படம் எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘STR51 படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என என்னால் சரியாக சொல்ல முடியாது.
இந்த படத்திற்காக சிம்பு சாரும், அஸ்வத்தும் ரெடியாக இருக்கிறார்கள். கதையும் ரெடியாகிவிட்டது. ஆனால் படத்தின் ஷூட்டிங்கில் சில மாற்றங்கள் இருக்கும். ஆனால் படம் நிச்சயம் வரும். இந்த படத்தின் ஷூட்டிங் 2027ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என நான் நினைக்கிறேன். அஸ்வந்த் மாரிமுத்து ஒப்பந்தமான படங்கள் மற்றும் சிலம்பரசன் சம்பந்தமான படங்களை முடிந்ததும் இந்த படம் துவங்கும். எல்லாம் தயாராகவே இருக்கிறது. அவர்கள் இருவரும் எப்போது ஓகே செல்கிறார்களோ அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும்’ எனக் கூறியிருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து - ரஜினி இணையம் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. எனவே அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஸ்வத் சிம்பு படத்தை துவங்குவார் என கணிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire