முதல்வர் விஜய் ஜூன்10ல் டில்லி பயணம்; அமைச்சர்களையும் அழைத்துச் செல்ல முடிவு
8 ஆனி 2026 திங்கள் 09:25 | பார்வைகள் : 1467
நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் விஜய் டில்லி செல்லும் போது, அமைச்சர்களையும் உடன் அழைத்துச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வராக, மே, 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றார். இதையடுத்து, 27ம் தேதி டில்லி சென்றார். அங்கு, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து வரும், 11ம்தேதி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும், 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார்.
இதற்காக, 10ம் தேதி டில்லி செல்கிறார். அங்கு மத்திய பா.ஜ., அரசுக்கு நெருக்கமான நபர்களை சந்தித்து, தமிழகத்தின் தேவைகளுக்கு நிதி பெறுவது குறித்து பேச்சு நடத்த உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திக்க, விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முதல் பயணத்தின் போது, அவருடன் அவரது உதவியாளர், அரசியல் ஆலோசகர், சிகை அலங்கார நிபுணர்கள் மட்டுமே தனி விமானத்தில் சென்றனர். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனவே, இம்முறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும், முதல்வருடன் தனி விமானத்தில் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire