புதிய ஆட்சிக்கு கால அவகாசம் கொடுங்கள்: த.வெ.க., அமைச்சர்கள் வேண்டுகோள்
8 ஆனி 2026 திங்கள் 10:28 | பார்வைகள் : 1170
புதியவர்களாகிய எங்களுக்கு மக்கள் சற்று கால அவகாசம் வழங்க வேண்டும், என, அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் கூறினர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசுத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன் அளித்த பேட்டி:லஞ்சம், ஊழலற்ற ஆட்சி, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவையே முதல்வர் விஜயின் லட்சியம். ஆட்சி பொறுப்பேற்ற 20 நாட்களிலேயே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைவருக்கும் தெரியும்.
புதியவர்களாகிய எங்களுக்கு, மக்கள் கொஞ்சம் கால அவகாசம் வழங்க வேண்டும். முந்தைய ஆட்சி காலங்களை விட, த.வெ.க. ஆட்சியில் அரசு அலுவலக செயல்பாடுகளின் மாற்றம் என்ன என்பதை அனைவரும் விரைவில் கண்கூடாக காணலாம். முதல்வர் விஜய், சரியாக காலை 10:00 மணிக்கு தலைமை செயலகத்துக்கு வந்துவிடுகிறார்.
மதிய உணவு இடைவேளையில்கூட வீட்டுக்கு செல்லாமல், அரைமணி நேரத்தில் உணவு உட்கொள்கிறார். மாலை வரை, தொடர்ந்து பணிபுரிகிறார். எந்த முதல்வர் இதுபோல் பணிபுரிந்திருக்கிறார்? தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியில் தேங்கிக்கிடந்த பணிகள் அனைத்தும் சரிசெய்யப்படும். தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 'சூப்பர் எல் நினோ' தாக்கம் இருக்கும் என கூறப்படுவதால், அதுகுறித்து வேளாண் துறை வாயிலாக தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருப்பூர் சாய ஆலைகளில் தேங்கியுள்ள கலவை உப்பு கழிவுகளை அகற்ற சென்னையை சேர்ந்த நிறுவனம் முன்வந்துள்ளது. சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்துடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது; விரைவில் கழிவுகள் அகற்றப்படும். மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வருவாய்த்துறை வாயிலாக ஆய்வு செய்து, அவர்களது அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire