பாஜ அரசு அமைந்த பின்னரே சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்வு!ராஜ்நாத் சிங்
8 ஆனி 2026 திங்கள் 11:35 | பார்வைகள் : 1204
மத்தியில் பாஜ அரசு அமைந்த பின்னரே சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது;
நாட்டில் விழிப்புணர்வு பெற்ற மக்கள் எண்ணிக்கை அதிகம். மத்தியில் பாஜ அரசாங்கம் அமைந்த பின்னரே சர்வதேச அரங்கில் நம் நாட்டின் மதிப்பு அதிகரித்துள்ளது என்பது அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
பிரதமராக மோடி பதவி ஏற்பதற்கு முன்பு இருந்த இந்தியா தற்போது இல்லை. அதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.
8-9 ஆண்டுகளில் மத்திய பாஜ அரசானது 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இன்று இந்தியா தன்னம்பிக்கையுடன் உள்ளது. மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. அதை என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire