RER A மற்றும் RER C தொடருந்து சேவைகள் பாதிப்பு - ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி!!
8 ஆனி 2026 திங்கள் 07:56 | பார்வைகள் : 2990
பரிஸ் நகரில் இன்று ஜுன் மாதம் 8ம் திகதி காலை இடம்பெற்ற இரு விபத்து சம்பவங்களால் RER A மற்றும் RER C தொடருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மத்திய பரிஸ் பகுதிகளில் உள்ள பல முக்கிய நிலையங்களுக்கு சேவை நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். RATP மற்றும் SNCF நிறுவனங்கள் சில பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதாக அறிவித்தன.
Nation நிலையத்தில் ஏற்பட்ட விபத்தையடுத்து Auber மற்றும் Vincennes இடையிலான RER A சேவை இன்று அதிகாலை முழுமையாக இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக Auber, Châtelet-Les Halles, Gare de Lyon, Nation மற்றும் Vincennes உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் தொடருந்துகள் இயங்கவில்லை. பின்னர் சில நேரங்களில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டாலும், முழு பாதையிலும் தொடர்ந்தும் கடுமையான தாமதம் நிலவுவதாக RATP தெரிவித்துள்ளது.
அதேவேளை Ivry-sur-Seine பகுதியில் ஏற்பட்ட மற்றொரு விபத்தால் RER C சேவை Juvisy மற்றும் Paris Austerlitz இடையிலும், Massy-Palaiseau மற்றும் Paris Austerlitz இடையிலும் இருவழிப் போக்குவரத்திலும் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் விரைந்து சென்றுள்ளனர். சேவை மீளத் தொடங்கும் நேரம் காலை 8 மணியாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மாற்று போக்குவரத்து வழிகள் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire