அஜித் போடும் கண்டிஷன்!
8 ஆனி 2026 திங்கள் 16:42 | பார்வைகள் : 1724
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். நடிப்பது மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக கார் ரேஸிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்கிற அணியையும் அவர் துவங்கியிருக்கிறார். ஒரு கார் ரேஸ் அணியை நடத்துவதற்கு நிறைய பணம் தேவை. அதனால்தான், குளிர்பான விளம்பரத்தில் கூட அஜித் நடித்ததாக சொல்லப்படுகிறது.
அந்த குளிர்பான நிறுவனம் சில கோடிகளை அஜித்தின் கார் ரேஸ் அணிக்கு ஸ்பான்சர் செய்து வருகிறது. ஒருபக்கம், குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.
தற்போது சில கார்ப்பரேட் சினிமா நிறுவனங்கள் அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முன்வந்தாலும் பணத்தை தனது துபாய் வங்கி கணக்கில் போட சொல்கிறாராம் அஜித். இதில் நிறைய சட்ட சிக்கல்கள் இருப்பதால் தயாரிப்பாளர் தயங்குகிறார்களாம். கார் ரேஸ் அணியை நடத்த பணம் தேவைப்படுவதால்தான் அஜித் இப்படி கேட்பதாக சொல்லப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire