புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு..!
8 ஆனி 2026 திங்கள் 18:41 | பார்வைகள் : 751
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும்.
முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan