காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜ கூட்டணிக்கு ஆதரவு!
9 ஆனி 2026 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 1126
திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் 20 பேர் லோக்சபா சபாநாயகரிடம் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். இது மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. அக்கட்சியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறி உள்ளனர்.
இந்த சூழலில், திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் லோக்சபா சபாநாயகரிடம் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கின்றனர்.இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் கூறியதாவது:
நான் உட்பட திரிணமுல் எம்பிக்கள் 20 பேர், தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைய விருப்பம் தெரிவித்து, அந்த எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு ககோலி கோஷ் தஸ்திதார் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire