மீண்டும் அதிகரிக்கும் வெப்பநிலை – வார இறுதியில் 34°C வரை உயர வாய்ப்பு!!
9 ஆனி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 3324
பிரான்ஸ் முழுவதும் வரும் சனிக்கிழமை பிற்பகலிலிருந்து கடும் வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரகாசமான வானிலை காணப்படவுள்ளதுடன், வெப்பநிலை 30 செல்சியஸை அண்மிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 29°C வரை வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் La Rochelle பகுதியில் 32°C மற்றும் Bordeaux 34°C வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும். வடமேற்கு பகுதிகளில் மட்டும் சற்றே குறைந்த வெப்பநிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
மே மாத இறுதியில் ஏற்பட்ட முன்னோடியான வெப்பஅலைக்குப் பின்னர் இந்த தற்காலிக குளிர்ச்சி காணப்பட்டதாகவும், தற்போது மீண்டும் வெப்பம் அதிகரித்து வருவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1900 ஆம் ஆண்டிலிருந்து பதிவானவற்றில் 2026 ஆம் ஆண்டின் வசந்தகாலமே மிக அதிக வெப்பமுடையதாக இருந்ததாக Météo France அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய ஆரம்பகால வெப்பஅலைகள் அதிகரித்து வருவதாகவும், இது மனிதர்களுக்கும் தாவர வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire